சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவத்தின் 10 ம் நாளில் மாலை நடை அடைக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்படும்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் டிச., 13 தொடங்கி திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல்பத்து நடக்கிறது. தினமும் பெருமாள் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி, பன்னிரு ஆழ்வார்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் நடக்கிறது. தொடர்ந்து உற்சவத்தின் 10 ம் நாளில் மாலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். இக்கோயிலில் மூலவர் பரமஸ்சுவாமி வடக்கு நோக்கி பரமபத நாதனாக அருள்பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயிலை அடைந்து, சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் நடை அடைக்கப்படும். டிச., 23 அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று தொடங்கி 10 நாட்கள் இராப்பத்து உற்சவம் தினமும் இரவு 8:00 மணிக்கு நடக்கும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்ட்டிகள் செய்து வருகின்றனர்.