உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு வனப்பகுதி சாலைகளில் செல்லும் வெளி மாநில பக்தர்கள்; கவனமாக செல்ல அறிவுரை

சபரிமலைக்கு வனப்பகுதி சாலைகளில் செல்லும் வெளி மாநில பக்தர்கள்; கவனமாக செல்ல அறிவுரை

கூடலூர்; கூடலூர் வழியாக, சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் கர்நாடக பக்தர்கள் வனப்பகுதி சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடு பக்தர்களும் வந்து செல்கின்றனர். கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஐயப்ப பக்தர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஐயப்பன் கோவிலுக்கு, வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் மூலம் அதிகளவில் சென்று வருகின்றனர். இதில் கர்நாடக பக்தர்கள் பலர், ஆண்டு தோறும், பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டு பக்தர்கள் கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் கூறுகையில், தினமும் 30 கி.மீ., நடை பயணம் செய்து, இரவில் கோவில் அல்லது சமூக கூடத்தில் தங்கி அடுத்த நாள் காலை பயணத்தை தொடர்கிறோம் என்றனர். வனத்துறையினர் கூறுகையில், வனத்தை ஒட்டிய சாலை ஓரங்களில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால், இரவில் பாதையாத்திரை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பகலில் எச்சரிக்கையுடன் நடந்து செல்ல வேண்டும் என, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !