உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான சர்ச்சில் திடீர் சிலையால் பரபரப்பு

தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான சர்ச்சில் திடீர் சிலையால் பரபரப்பு

ராமேஸ்வரம்; தனுஷ்கோடியில் புயலில் இடிந்த பழமையான மாதா சர்ச்சில் திடீரென அந்தோணியார் சிலை வைத்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் மாதா சர்ச், விநாயகர் கோயில் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து சின்னாபின்னமாகியது. இடிந்த நிலையில் 59 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் சர்ச் வரலாற்று சுவடாக சுற்றுலா பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. இந்த சர்ச் பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், கனமழை சூறை காற்று வீசினால் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சார்ச்சில் 2 அடி உயரத்தில் புனித அந்தோணியார் சிலையை கண்ணாடி கூண்டுக்குள் வைத்து நிறுவி உள்ளனர். இந்த சிலை திறந்த வெளியில் உள்ளதால், மர்ம ஆசாமிகளோ அல்லது சூறாவளி காற்றில் சேதமடைந்தாலோ அதிகாரிகளுக்கு தான் தலைவலி ஏற்படுத்தும். எனவே இச்சிலையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !