உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; இனி யாவும் சுபமே.. திருநள்ளாரில் பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு

பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; இனி யாவும் சுபமே.. திருநள்ளாரில் பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு

காரைக்கால்; உலக பிரசித்தி பெற்ற காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில்  சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான். பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று (20ம்தேதி) சனீஸ்வரபகவான் மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு இடம் பெயர்ந்தார். சனிபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். சனிபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று இரவு தங்ககாக வாகனம் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவர் சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்,கட்டளை விசாரணை கந்ததசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சனிப்பெர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 4மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சனீஸ்வர பகவானுக்கு பால், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16வகையான திரவங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !