இன்று முதல் வீடு தேடி வருகிறாள் அன்னை மீனாட்சி; பாலிமர், ஜோதி டிவியில் பச்சைப்புடவைக்காரி
மதுரை, பச்சைப்புடவைக்காரி தொடர் இன்று (டிச., 22) முதல் வெள்ளி, சனிக் கிழமைகளில் மாலை 6:00 மணிக்கு பாலிமர் டிவியிலும், இரவு 7:00 மணிக்கு ஜோதி டிவியிலும் ஒளிபரப்பாகிறது. வரலொட்டி ரெங்கசாமி எழுதி, தாமரை - பிரதர்ஸ் மீடியா(பி) லிட் வெளியிட்டு பெரிதும் படிக்கப்பட்ட புத்தகம் பச்சைப்புடவைக்காரி. வெள்ளி தோறும் வெளிவரும் தினமலர் ஆன்மிக மலர் புத்தகத்தில் தொடராக வெளிவந்து இதுவரை நான்கு பாகங்கள் புத்தகமாக வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மனை நாம், நம்மிடையே காணும் கதாபாத்திரமாக சித்தரித்து உருவான அற்புத கதைகள் வாசகர்களை பெரிதும் ஈர்த்தன. தற்போது பச்சைப்புடவைக் காரியை தொலைக் காட்சி தொடராக தாமரை பிரதர்ஸ் மீடியா(பி) லிட் தயாரித்துள்ளது. இது மெகா தொடர் என்றாலும், புதுமையாக ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது. சீரியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு, வெப் சீரிஸ் மாடலில் இருக்கும். தொடர் பற்றிய கருத்துக்களை 75500 09565 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.