உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை, திநகர் திருமலை திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை, திநகர் திருமலை திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை; தி.நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கட நாராயணர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 முதல் 10 30 வரை நெய்வேத்தியம் நடைபெறும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 30 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு இலவசமாக, பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !