உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி சனிபகவான் மகரராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசித்தார். இந்நிலையில் சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் குளிரும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வருகைப்புரிந்தனர்.அதிகாலை 4.மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கட்டண தரிசனம், தர்மதரிசனம் என்று அனைத்து பக்தர்களும் வரிசையாக சென்று பகவான் சன்னதி ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் அதிகாலையிலிருந்து நளன் தீர்த்தத்தில் புனித நீராடி பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் தேங்காய் உடைந்தனர். கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நிறைவேற்றினார்கள். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு நலன்கருதி சீனியர் எஸ்.பி.,நித்தின் கெஹால் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !