திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா; சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
ADDED :762 days ago
திருப்பதி; திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இன்று துவாதசி விழாவை முன்னிட்டு, அதிகாலை கோவிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.