விளமல் மதுரபாஷினி கோயிலில் நவராத்திரி விழா!
ADDED :4742 days ago
சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலட்சுமியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் மதுரபாஷினியை நவராத்திரியில் நாட்களில் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 23.10.2012 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம். அதைத்தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம்பெறலாம்.
போன்: 9894781778, 94894 79896.