உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. -

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை இன்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறந்து, அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலையில் உற்சவர் அம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து மாலை 6 மணிக்கு பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது. அங்கு ஏராளமான பெண்கள் திருவிளக்கேற்றி பூஜை செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் தலைமையில் பூசாரிகள் அம்மனை போற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !