உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை; தீ மிதித்து பக்தர்கள் நேற்றிக்கடன்

தர்மசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை; தீ மிதித்து பக்தர்கள் நேற்றிக்கடன்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி சந்திரா பாளையம் தர்மசாஸ்தா கோயிலில் 54வது ஆண்டு மண்டல பூஜை, 35வது ஆண்டு தீ மிதித்தல் நிகழ்ச்சி, கன்னி பூஜை, பால்குடம் உற்ஸவம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேற்றிக்கடன் செலுத்தினர். கன்னி பூஜை முடிந்து பக்தர்களுக்கான வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், சுப்புராமன், ஜெமினி, அன்பு செழியன், சக்திவேல், தங்கப்பாண்டி திருவிழா ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !