உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரியம் மாறாமல் சுவாமி ஊர்வலத்தின் போது கோலாட்டம் ஆடும் பெண்கள்

பாரம்பரியம் மாறாமல் சுவாமி ஊர்வலத்தின் போது கோலாட்டம் ஆடும் பெண்கள்

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே கானூர் சிவகாமி அம்பிகை உடனாய ஸ்ரீபிரளயவிடங்கேஸ்வரர் சுவாமி ஊர்வலத்தின் போது மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் கோலாட்டம் ஆடியபடி வலம் வருகின்றனர். கானூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரளயவிடங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கும் அதிலும் மார்கழி மாதம் முழுவதும் தினசரி வீதி உலா, பஜனை நடைபெறும் 67 ஆண்டுகளாக திருவாதிரை உள்ளிட்ட திருவிழாக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி வரை நடந்தது. கோயிலில் தினசரி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் பெண்கள் குழு பாடி வலம் வருவது வழக்கம், மேலும் தினசரி பூஜையின் போது காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்வலத்தில் பெண்கள் குழு கோலாட்டம் ஆடி மகிழ்விக்கின்றனர்.

பெண்கள் கூறுகையில்: சிவாலயங்களில் சுவாமி வீதியுலாவின் போது பெண்கள் ஆடி பாடி வலம் வருவது வழக்கம், ஆடல் நாயகனான நடராசர் விழா உள்ளிட்ட நாட்களில் நாங்கள் கோலாட்டம் ஆடி வலம் வந்தோம், இது போன்று அனைத்து பகுதிகளிலும் விழா காலங்களில் பண்டைய கால நடனம், கோலாட்டம், சலங்கையாட்டம் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !