உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் திருவிழாவில் படுக நடனமாடிய மத்திய இணை அமைச்சர்

ஹெத்தையம்மன் திருவிழாவில் படுக நடனமாடிய மத்திய இணை அமைச்சர்

கோத்தகிரியில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் படுக நடனம் ஆடி அசத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் எப்பநாடு, ஒன்னதலை, பெத்துவா, இருப்புகல், காட்டுக்குழி, பெப்பேன் உள்ளிட்ட கிராமங்களில், நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் முருகன் பங்கேற்றார். இதில் கிராமங்களில் உள்ள குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து படுகரின பாரம்பரிய உடை அணிந்து புகைப்படம் எடுத்தார். மக்களுடன் இணைந்து பாரம்பரிய படுக நடனம் ஆடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !