உடல் மீது தீபம் ஏற்றி புத்தாண்டை வரவேற்ற மாணவர்கள்
ADDED :753 days ago
கூடலுார்; புத்தாண்டை வரவேற்கும் விதமாக உடல் மீது தீபம் ஏற்றி கூடலுார் ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவிகள் ஆசனம் செய்து அசத்தினர்.
2024 புத்தாண்டில் விவசாயம் செழித்து நாடு முன்னேறவும், இயற்கை பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்கவும், எல்லா மக்களுக்கும் மிக சிறப்பான ஆண்டாக அமைய ரிஷி யோகா டிரஸ்ட் மாணவ மாணவிகள் கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் சமகோணாசனம் செய்து தங்கள் உடல் மீது கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆசனம் செய்த மாணவ மாணவிகளையும், யோகாசன பயிற்சியாளர் ரவிராம், யோகா நிபுணர் ராஜேந்திரனையும், பள்ளி முதல்வர் பால கார்த்திகா, ஆசிரியர்கள் பாராட்டினர்.