சென்னை, தி.நகர் திருப்பதி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
சென்னை; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி கோவில் வளாகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகலை 3:00 மணி முதல் இரவு 10:00 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைகுழுந்தை வைத்திருந்தர்களுக்கு தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசிக்கு 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புத்தண்டில், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் லட்டுகள் வரவழைக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. தாயார் சன்னதியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு பக்தர்களுக்கு 5,000 லட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், 5,000 லட்டு விற்பனை செய்யப்பட்டன.