ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்; பக்தர்கள் பரவசம்
ADDED :679 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், இன்று காலை நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில் ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக சென்று, சந்திர புஷ்கரணியில் தீர்த்த வாரி காணும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 6 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமாமணி மண்டப்பத்தில் இருந்து காலை, 9.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலஸ்தானத்தில் நாளை சந்தனு மண்டப்பத்தில் இயற்பா பிரபந்த சேவையும், சாற்றுமறையும் நடக்கிறது.