பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்
ADDED :678 days ago
பழநி; பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ராம ஜென்ம பூமி ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பழநி புலிப்பாணி ஆசிரமத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் உடன் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் ஜன.22 அயோத்தியில் நடைபெற உள்ள ராமஜென்ம பூமி ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதனை சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது. புலிப்பாணி சுவாமிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அழைப்பிதழை ஆர்.எஸ்.எஸ் மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில் ஆகியோர் வழங்கினர்.