உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் வரசித்தி செல்வ விநாயகர் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று நடக்கிறது.விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் வரசித்தி செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று 24ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு முதல் கால பூஜை துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, கேஸ்ரநாம பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 24ம் தேதி காலை 5.30 மணி முதல் இரண்டாம் கால பூஜை, கடம் புறப்பாடு, சங்கு அபிஷேகம், மண்டலாபிஷேகம் பூர்த்தி, விநாயகர் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை வரசித்தி செல்வ விநாயகர் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !