அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால கொடியேற்றம்; பக்தர்கள் பரவசம்
ADDED :739 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரிகள் வேத மந்திரங்கள் ஓதி, மேளதாளத்துடன் தங்கக்கொடி மரத்தில் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தி அம்மன் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.