சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :736 days ago
சின்னாளபட்டி; சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், மார்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக திருமஞ்சன அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் முன் உள்ள வளாகத்தில், 501 திருவிளக்கு பூஜை நடந்தது. மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.