ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மியான்மர் புத்த தெப்பம்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கடற்கரையில் மியான்மர் பக்தர்கள் வழிபட்டு கடலில் விட்ட புத்தர் தெப்பம் கரை ஒதுங்கியது.
ராமேஸ்வரம் ஓலைகுடா பிசாசுமுனை கடற்கரையில் 15 அடி நீளம் 15 அடி அகலத்தில் புத்தர் கோயில் கோபுரம் போல் வடிவமைத்த தெப்பம் மிதவை கேன்கள் மூலம் ஒதுங்கியது. இதனை மரைன் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஒரு அடி உயரத்தில் ஒரு புத்தர் சிலையும், சிறிய அளவில் புத்தரின் சீடர்கள் இருப்பது போல் மூன்று சிலைகள் உள்ளது. இந்த தெப்பம் மியான்மர் கியோகாமி நகரில் உள்ள புத்தர் கோயிலில் இந்த தெப்பத்தை வடிவமைத்து பக்தர்கள் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து பவுர்ணமியான டிச., 26ல் கடலில் விட்டுள்ளனர். இது தற்போது வீசும் வடகிழக்கு சூறாவளி காற்றின் வேகத்தில் இன்று ராமேஸ்வரம் ஒதுங்கியது. இதேபோல் மற்றொன்று இரு நாள்களுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் ஒதுங்கி உள்ளது.