உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவம்; மாட வீதியில் உலா வந்த அருணாசலேஸ்வரர்
ADDED :998 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.