உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி; கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

அனுமன் ஜெயந்தி; கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

காரைக்கால்; காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு. வெண்ணை மற்றும் சந்தன காப்பு அலங்கரம் மற்றும் துளசி மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமன் ஜெயந்தி விழாவையோட்டி ஏராளமான பக்தர்கள் பஞ்சமூக ஆஞ்சநேயரை வழிப்பட்டனர். இதுப்போல் திருநள்ளார் நளநாராயண பெருமாள் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !