கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா; ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
ADDED :832 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் வெகு சிறப்பாக நடந்தது.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி வருடம் தோறும் மார்கழி மாதம் இருபத்தி ஏழாம் நாளன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசல் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசல் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.