மார்கழி கடைசி சனி; வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :993 days ago
கோவை; அன்னூரில் உள்ளஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சர்வ அலங்காரத்துடன் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.