உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலாராம் கோயில் வளாகத்தை தூய்மை செய்த பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

காலாராம் கோயில் வளாகத்தை தூய்மை செய்த பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

நாசிக்: மஹாராஷ்டிராவில் உள்ள காலாராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்த வீடியோ வைரலாகியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் சென்றுள்ள பிரதமர் மோடி, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர், பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோயிலுக்கு சென்ற மோடி, வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கோயில் வளாகத்தில் தண்ணீர் வாளியை தானே தூக்கி சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.  மேலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோயில் வளாகத்தில் அவர் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !