கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரே வெல்லும் சீர் விழா
ADDED :721 days ago
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரே வெல்லும் சீர் விழா நடைபெற்றது. ஆண்டாள் நாச்சியார் பெருமாளை மனம் முடிப்பதற்காக 30 நாட்கள் தவமிருந்து, பெருமாளை திருமணம் செய்த மார்கழி 27ம் நாளில் கொண்டாடப்படுவதே கூடாரே வெல்லும் சீர் விழா ஆகும். நேற்று அவிநாசி ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கூடாரே வெல்லும் சீர் விழா பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.