மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
605 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
605 days ago
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி உற்சவம் விமரிசையாக நடந்தது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை திருப்பாவை கோஷ்டியினரால் கூடாரவல்லி விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், ராமானுஜர் கள்ளழகர் திருக்கோயிலில் நிகழ்த்திய அக்கார வடிவில் மற்றும் வெண்ணெய் பூஜை பரமக்குடியில் நடத்தப்பட்டது. அப்போது 108 வட்டிலில் அக்காரவடிசில் (பொங்கல்), 108 வட்டிலில் வெண்ணெய் என 216 வட்டிலில் படைக்கப்பட்டது. காலை 5:00 மணிக்கு ராமானுஜர் வலம் வந்தார். பின்னர் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது.*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி, பெருமாள், ஆண்டால் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் திருப்பாவை பாடல்கள் பாடினர். தொடர்ந்து தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
605 days ago
605 days ago