ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று பிரதமர் மோடி தரிசனம்
ADDED :657 days ago
திருச்சி: 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று (ஜன.,20) வழிபாடு நடத்துகிறார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு திருச்சி செல்கிறார் பிரதமர் மோடி. பின்னர் அவர், காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்த பின் இன்று இரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து, நாளை அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயிலுக்கு செல்கிறார்.
கட்டுப்பாடு விதிப்பு: பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. திருச்சியில் இன்று மதியம் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.