அயோத்தி ராமர் கோவில் கருவறையை அலங்கரிக்கும் சென்னை மலர்கள்
ADDED :655 days ago
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவிலின் மலர்கள் அலங்கார குழு தலைவர் சஞ்சய் தவாலிகார் கூறுகையில், ராமர் கோவில் முழுவதையும் 3,000 கிலோ எடையிலான, 20க்கும் மேற்பட்ட மலர் வகைகளால் அலங்கரித்துஉள்ளோம். இதற்காக, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலர்களை வரவழைத்து உள்ளோம். சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிக நறுமணம் வீசக்கூடிய மலர்களை கொண்டு, கோவில் கருவறையை அலங்கரித்துள்ளோம், என்றார்.