அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரதமர்; சங்கல்ப பூஜை
ADDED :654 days ago
அயோத்தி ; கடந்த 500 ஆண்டுகளாக நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்னும் சில நிமிடங்களில் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. இதற்காக கடந்த 11 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி அயோத்தி வந்துள்ளார். ராமாயண தொடர்புடைய பல்வேறு தலங்களுக்கு, ராமர் சென்ற வழியில் வழிபட்டு வந்த பிரதமர் மோடி, தற்போது புனித தீர்த்ததுடன் அயோத்தி கோவில் கருவறை வந்தார். தொடர்ந்து சங்கல்ப பூஜை செய்தார்.