சிரித்த முகத்துடன் கண் திறந்தார் ராமர்; நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் மோடி
அயோத்தி பால ராமர் சிலைக்கு முதல் தீபாராதனை காட்டிய பிரதமர் மோடி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் நடைபெற்றது. சிரித்த முகத்துடன் கண் திறந்த பால ராமரை, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் மோடி. ஐந்து நூற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் ராம் லல்லாவுக்கு பிரார்த்தனை செய்தனர்.