காளஹஸ்தியில் பக்த கண்ணப்பருக்கு பல வித அபிஷேகம்
ADDED :634 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் பக்த கண்ணப்பருக்கு நேற்று சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்த கண்ணப்ப சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு, கோயில் செயல் அலுவலர் கே.எஸ்.ராமராவ், மற்றும் கோயில் அலுவலர்கள், மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுமார் 300 பக்த கண்ணப்ப பக்தர்கள் உட் பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.