திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
ADDED :653 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையையே, அருணாசலேஸ்வரராக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த மலையை, பவுர்ணமி தோறும், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் வலம் சென்று, அருணாசலேஸ்வரரை வழிபடுவதாக, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகளின் ஆசியும், அருணாசலேஸ்வரரின் அருளாசியும் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமி திதி இன்று இரவு, 10:44 மணி முதல், நாளை இரவு, 11:56 வரை உள்ளது. இந்த நேரம், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.