பாண்டி முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்; மூலவருக்கு 16 வகை அபிஷேகம்
ADDED :630 days ago
திருப்புல்லாணி; திருப்புல்லாணியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
மூலவர் பாண்டி முனீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சேதுராணி செய்திருந்தார். யாகவேள்வி வளர்க்கப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.