திருக்கோஷ்டியூர் மகோத்ஸவம்: பெருமாள் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :700 days ago
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவத்தை முன்னிட்டு பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் ஜன.23 ல் துவங்கியது. தொடர்ந்து ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளல், தைலம் திருவீதி வலம் வருதல், தைலம் சாத்துதல், ஆண்டாளுக்கு நவகலச அலங்காரம ஸெளரித் திருமஞ்சனம், நவகலை அலங்கார திருமஞ்சனம், ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை, ஆண்டாள் முத்துக்குறிப் பார்த்தல் நடந்தது.