/
கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராம் ஜென்மபூமியில் ராக சேவை ; பக்தர்களை கவர்ந்த சுஜாதா மொஹாபத்ராவின் நடனம்
அயோத்தி ராம் ஜென்மபூமியில் ராக சேவை ; பக்தர்களை கவர்ந்த சுஜாதா மொஹாபத்ராவின் நடனம்
ADDED :703 days ago
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் 45 நாட்கள் ராக சேவை எனும் இசை வழிபாடு நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் நேற்று புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரும், கேந்திரிய சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவருமான சுஜாதா மொஹாபத்ராவின் நடனம் நடைபெற்றது. ராம்லல்லா மீது உள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த நடனம் பக்தர்களை கவர்ந்தது.