உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமியை முன்னிட்டு பழநியில் வன்னிகாசூரவதம்!

விஜயதசமியை முன்னிட்டு பழநியில் வன்னிகாசூரவதம்!

பழநி: விஜயதசமியை முன்னிட்டு பழநியில் வன்னிகாசூர வதம் நடந்தது. மலைகோயில், திருஆவினன்குடி கோயில் நடை அடைக்கப்பட்டது. வன்னிகா சூரனை வதம் செய்யும் பொருட்டு, மலைகோயில் மூலவர் சன்னதியில் இருந்து பராசக்திவேல் புறப்பாடாகி, படி வழியாக திருஆவினன்குடி கோயிலை அடைந்தது. மயில் மண்டபத்தில் பராசக்தி வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பெரியநாயகியம்மன் கோயிலுக்கு புறப்பாடு ஆனது. அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி, தங்க குதிரை வாகனத்தில் பராசக்திவேல், கத்தி, கேடயம், வில், அம்புடன் கோதைமங்கலம் கோதையீஸ்வரர் கோயில் அருகே எழுந்தருளினார். சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் அம்பு எய்து வன்னிகாசூரனை வதம் செய்தார். பராசக்திவேல் புறப்பாடு ஆனபின் மலைகோயில் சன்னதி அடைக்கப்பட்டது. திருஆவினன்குடி கோயில் நடையும் அடைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !