தினமலர் செய்தியால் சுடர்விடும் திருப்பரங்குன்றம் கோயில் அணையா விளக்குகள்
ADDED :638 days ago
திருப்பரங்குன்றம்; தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூன்று அணையா விளக்குகளும் சுடர்விடுகிறது. கோயில் ஆஸ்தான மண்டபம், கம்பத்தடி மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் 24 மணி நேரமும் சுடர்விடும் வகையில் அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினம் ஏதாவது ஒரு விளக்கு அணைந்தே கிடந்தது. கோயில் துணை கமிஷனர் உத்தரவிட்டும் இந்த விளக்குகளை கவனிக்க உள்துறை நிர்வாகத்திற்கு மனமில்லை, மூன்று அணையா விளக்குகளையும் தொடர்ந்து எரிவதற்கு ஆவன செய்ய வேண்டும் என தினமலர் செய்தி வெளியிட்டது. செய்தியின் எதிரொலியாக அணையா விளக்கை கண்காணிக்க ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அணையா விளக்குகள் தொடர்ந்து எரிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.