உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

திருக்கோவிலூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில், ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலம் முக்கிய வீதி உள்ள வழியாக சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு அம்மனுக்கு சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் நிர்வாகி சக்திவேல், தொழிலதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், டாக்டர் பால்ராஜ், சாந்திபால், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுப்பிரமணி திருவாணன், பிரபாகரன், நகராட்சி கவுன்சிலர் கலையரசி, அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், சிவசங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !