கொடிசியா திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
ADDED :778 days ago
கோவை; கொடிசியா திருப்பதி பெருமாள் கோவிலில் தை மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் வெங்கடேச பெருமான் பக்தர்ளுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.