உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நேற்று நடந்தது.


வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகமும், மதியம் 12:00 மணியளவில் தீபாராதனையும், மாலை 5:30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 6:00 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் தலைமையில் உபயதாரர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !