உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் ஆதியோகி ரத யாத்திரைக்கு வரவேற்பு

ராஜபாளையத்தில் ஆதியோகி ரத யாத்திரைக்கு வரவேற்பு

ராஜபாளையம்; மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையம் சார்பில் ஆதியோக ரத யாத்திரையை ராஜபாளையத்தில் பக்தர்கள் வரவேற்றனர். சிவராத்திரி விழாவிற்கான பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் வெவ்வேறு திசைகளில் நான்கு ஆதியோக ரதங்கள் யாத்திரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ராஜபாளையத்தில் இரண்டு நாட்களாக ராம மந்திரம், ஜவஹர் மைதானம், பி.எஸ்.கே நகர், சொக்கர் கோயில், பெரிய சாவடி பகுதிகளில் மக்கள் தரிசனத்திற்காக ரத பவனி நடந்து சங்கரன்கோவில் வழியாக சுரண்டை சென்றது. இந்து இயக்கங்கள், பக்தர்கள் வரவேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில் ஈஷா அமைப்பினர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !