உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை  பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நான்கு மாட வீதிகள் வலம் வந்து தேரடியை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !