கள்ளக்குறிச்சி கோவில்களில் 29ம் தேதி அன்னாபிஷேகம்
ADDED :4747 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் வரும் 29ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், தென்கீரனூர், முடியனூர், நீலமங்கலம், வரஞ்சரம், சின்னசேலம், தென்பொன்பரப்பி, கூகையூர் மற்றும் கச்சிராயபாளையம் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வரும் 29ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினத்தில் மூலவர் ”வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிவலிங்கத்திற்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.