/
கோயில்கள் செய்திகள் / வசந்த பஞ்சமி; உ.பி, பிரயாக்ராஜில் புனித நீராட பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
வசந்த பஞ்சமி; உ.பி, பிரயாக்ராஜில் புனித நீராட பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :635 days ago
பிரயாக்ராஜ்; வசந்த பஞ்சமியை முன்னிட்டு உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ், சங்கமத்தில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பிரயாக்ராஜ் நகரில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, மகாமேளா நடைபெற்றது. யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இங்கு நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வசந்த பஞ்சமியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். ரத சப்தமி, பீஷ்டாஷ்டமி நாளிலும் இங்கு பல லட்சம் பக்தர்கள் நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.