வசந்த பஞ்சமியில் அயோத்தி ராமரின் அற்புத தரிசனம்; பக்தர்கள் பரவசம்
ADDED :716 days ago
அயோத்தி ; வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். இது ரிஷி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி நாளில் வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் ஆடையில் வில்லேந்தி நின்ற பாலராமரின் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிராண பிரதிஷ்டை செய்த தினம் முதல் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாளை ரத சப்தமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.