பஞ்சவடீ கோவிலில் விஜயதசமி விழா!
ADDED :4773 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் விஜயதசமி விழா நடந்தது. புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் நவராத்திரி விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்தனர். மகாலட்சுமி, வேணுகோபாலன், திருவேங்கடமுடையான், வெண்ணைத்தாழி கண்ணன், ராமர், வைகுண்ட நாதர், ராமர்-சரஸ்வதி அலங்காரங்களில் ”வாமி அருள்பாலித்தார். நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் மாலை விஜயதசமி விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.