உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரதசப்தமி விழாவிற்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தயார்

ரதசப்தமி விழாவிற்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தயார்

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நாளை பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக்கிழமை ரதசப்தமி விழா கொண்டாட சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு வாகனங்களில் சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால்ஸ்ரீவாரி கோயிலுடன் அன்னபிரசாதம், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட துறையினர் சேர்ந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.சூர்யபிரபை வாகனம் (காலை 5.30 முதல் 8 மணி வரை); சூர்யபிரபை வாகனசேவை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. சூரியபிரப வாகனத்தில் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்வதால், ஆரோக்கியம், கல்வி, செல்வம், சந்ததி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து, காலை 9 முதல் 10 வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம்,  பிற்பகல் 1 முதல் 2 வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 வரை புஷ்கரிணியில் சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 முதல் 9 வரை சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனத்தில் வலம் வருகிறார் மலையப்பசுவாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !