அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED :4728 days ago
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலமன் கோயில் திருவிழா கடந்த அக்.22 முதல் நடக்கிறது. முதல்நாள் கண்திறத்தல் நடந்தது. அதன்பின், அம்மன் சொருகுப்பட்டை சப்பரத்தில் எழுந்தருளி, பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சித்தன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., தண்டபாணி, அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் பாபுஜி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணை தலைவர் சுப்பிரமணி, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், அகரம் அ.தி.மு.க., பேரூர் கழக துணைச் செயலாளர் அம்மாவாசி, ஸ்ரீ பைரவரா பைனாஸ் உரிமையாளர் ரவிபாலன் உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கோயில் பரம்பரை அறங்காவலர் குழு செய்திருந்தனர்.